வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி

கடலுார்: விருத்தாசலம் மெக்கானிக்கிடம் கனடா, குரோஷியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4.10 லட்சம் மோசடி செய்த பலே ஆசாமியை கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம் அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன் வீரமோகன் 44; மெக்கானிக். விருத்தாசலம் அடுத்த ஏ.சித்துார், வடக்கு காலனியைச் சேர்ந்த கொளஞ்சி மகன் குமார் 35; இவர் வேப்பூரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் கே.கே.பி இன்டர்நேஷனல் மேன்பவர் கன்சல்டன்சி வைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு வீரமோகனும் மைத்துனர் மகன் கருப்புசாமி இருவரும் குமார் வேளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக அறிந்து அவரை தொடர்பு கொண்டனர்.
அப்போது இருவரையும் வேப்பூர் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். பின் அவர்கள் அங்கு சென்று குமாருடன் பேசியுள்ளனர். இதில் வீரமோகனுக்கு குரோஷியா நாட்டிலும், கருப்புசாமிக்கு கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக குமார் கூறினார். குரோஷியா நாட்டு வேலைக்கு ரூ.3.50 லட்சமும், கனடா நாட்டு வேலைக்கு ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார். அதனால் வீரமோகன் 5 தவணையாக ரூ.2.70 லட்சமும், கருப்புசாமி 3 தவணையாக ரூ.1.40 லட்சம் என இருவரும் பணத்தை இந்தியன் வங்கி கணக்கில் இருந்து அனுப்பினர்.
இருவரும் நான்கு மாதங்கள் கழித்து வெளிநாட்டு விசாவிற்கு விண்ணப்பித்த போது, விண்ணப்பித்த பேப்பர்கள் அனைத்தும் போலியானவை என கூறி விசா மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து புரோக்கர் குமாரிடம் கேட்டபோது, நீங்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்தும், பல மாதங்கள் ஆகியும் கொடுக்காமல் கால தாமதம் செய்தார்.
வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த போது ரூ.70,000 மட்டும் கொடுத்தார். பக்கி பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். பின்னர் அலுவலகம் சென்று பார்த்த போது, இது போன்று பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றியது தெரிய வந்தது.
இது குறித்து விரமோகன் எஸ்.பி., ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார். புகார் மனுவை மாவட்ட குற்றப்பிரிவு விசாரணைக்கு பரிந்துரை செய்து, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, எஸ்.ஐ., லிடியாசெல்வி விசாரணை செய்து, குமாரை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்