பொற்கோவிலை பாக். தாக்குதலில் இருந்து காத்தது எப்படி; மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்

13

புதுடில்லி; பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.


@1brமே 8 மற்றும் 9 தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அனைத்து ஏவுகணைகளையும் அழித்தது.


அப்போது பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில் மீது பாக். ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இந்திய ராணுவம் மிக திறமையாக செயல்பட்டு அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.


இதுகுறித்து இந்திய ராணுவ 15வது படை பிரிவு மேஜர் ஜெனரல் கார்த்திக் சேஷாத்ரி கூறியதாவது;


பொற்கோவிலை நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய வான்படை வழிமறித்து தாக்கி அழித்தது. அவர்களிடம் (பாகிஸ்தான்) சரியான இலக்குகளை இல்லை என்பதை கண்டறிந்தோம்.


இருப்பினும், பொற்கோவில் முக்கிய இலக்காக இருக்கலாம் என்று யூகித்து, அதை பாதுகாக்க நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை தயார்படுத்தினோம். பாக். தாக்குதல்களை முறியடித்து, பொற்கோவிலுககு ஒரு கீறல் கூட விழாமல் பாதுகாத்தோம்.


அதன் பின்னர், பாக். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு எல் 70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு பொற்கோவிலை பாதுகாத்தது என்பது பற்றிய விரிவான செயல்விளக்க காட்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Advertisement