மே 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் மே.22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா அளித்த பேட்டி:
மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் மே.22ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வடக்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக கோவை மாவட்ட மலைபகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் (மே.20) கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 90 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது.தற்போது வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10.செ.மீ, ஆனால் 19.2 செ.மீ ., மழை பெய்துள்ளது.
சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ., ஆனால் 7.4 செ.மீ., மழை பெய்துள்ளது. பருவமழை அடுத்தவாரம் மேலும் வலுவடையும்.
இவ்வாறு அமுதா கூறினார்.
மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: லக்னோ அணி பேட்டிங்
-
உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும்; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
-
அக்னி பிரவேசம்
-
பிரசாந்த் கிஷோர் கட்சி தலைவராக பா.ஜ., முன்னாள் எம்.பி., நியமனம்!
-
கடும் நிதி பற்றாக்குறை; 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்!
-
வாரத்தின் தொடக்க நாளில் சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!