மிட்சல் மார்ஷ், மார்க்ரம் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு 206 ரன் வெற்றி இலக்கு

லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி, 205 ரன்கள் எடுத்தது.
18 வது பிரீமியர் லீக் போட்டி தொடரின் 61வது ஆட்டம், இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல்பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் லக்னோ அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இந்நிலையில் முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மிட்சல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் சிறப்பான துவக்கம் தந்தனர்.
மிட்சல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் அரைசதம்:
சிறப்பாக விளையாடிய மிட்சல் மார்ஷ் 39 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
மார்க்ரம் 38 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதில் 4 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த படோனி 3 ரன்களில் மலிங்கா பந்தில் அவுட் ஆனார்.
இந்நிலையில் அடுத்த வந்த நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூரன் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இறுதியாக, லக்னோ அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணியின் மலிங்கா, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஐதராபாத் அணிக்கு 206 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும்
-
நீதிபதி வீட்டில் எரிந்த பணம் விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., போடாதது ஏன்? தன்கர் கேள்வி
-
பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர்கள் 6 பேருக்கு பணியிட மாறுதல்
-
கோலி ஓய்வு ஏன்: ரவி சாஸ்திரி கணிப்பு
-
ஆபரேஷன் சிந்தூர் தேச பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த பாடம்: ஐ.ஐ.டி. இயக்குநர் பெருமிதம்
-
மலேசிய பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து
-
இந்திய ஜோடி ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்