கோலி ஓய்வு ஏன்: ரவி சாஸ்திரி கணிப்பு

புதுடில்லி: இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 - ஆக. 4) பங்கேற்கிறது. சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்தியாவின் கோலி 36, ஓய்வு பெற்றார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:
கோலி, இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்டில் விளையாடலாம். இவரை, இங்கிலாந்து தொடரில் பார்க்க விரும்பினேன். இவருக்கு கேப்டன் பதவி கூட வழங்கியிருக்கலாம். அதற்கான தகுதி அவரிடம் உள்ளது. ஆனால் ஏன் ஓய்வு பெற்றார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் இவர், மன சோர்வு காரணமாக ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். இங்கிலாந்து தொடரில் கோலி விளையாடாதது வருத்தம். இனி, ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுவார். கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பின், பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ செயல்பட விரும்பமாட்டார்.
இவ்வாறு சாஸ்திரி கூறினார்.

Advertisement