சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
பொன்னேரி,
பொன்னேரி அருகே உள்ள மீனவ கிராமத்தில், அங்குள்ள ஏரியில் மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இக்கிராமத்தில், போலீசார் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த சுதாகர், 24, என்பவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, மீனவ கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே சென்றார்.
அங்கிருந்த, 20 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண் கூச்சலிடவே, உறவினர்கள் ஓடி வந்து, சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற காவலரை, சரமாரியாக தாக்கினர். பின், திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசாரிடம், காவலரை ஒப்படைத்தனர். இதுதொடர்பான புகாரின்படி, திருப்பாலைவனம் போலீசார், சுதாகர் மீது தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
தென்மாவட்டம், கொங்கு மண்டலத்தில் போட்டி திருமாவளவனுக்கு மா.செ.,க்கள் அழுத்தம்
-
கல்லுாரி மாணவிக்கு டார்ச்சர்: தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விசாரிக்கவும்: அண்ணாமலை
-
காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்
-
அ.தி.மு.க.,- பா.ஜ.,வுடன் ஜனசேனா கூட்டணி?
-
திரிணமுல் காங்., கூட்டத்தில் பங்கேற்க சீமானுக்கு அழைப்பு