தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விசாரிக்கவும்: அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே, பல நுாறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை, வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விக்னேஷ், ஓட்டப்பிடாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்த சிலை கடத்தலில், எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு இருப்பதாகவும், மக்கள் புகார் கூறுகின்றனர்.
ஆனால், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதாலேயே, சிலை கடத்தல் வழக்கில் சண்முகையா, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது.
யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரையும், சட்டத்தின் முன், அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.










மேலும்
-
சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்
-
அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!
-
அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
-
குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!
-
இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்
-
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி