குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!

ஆமதாபாத்: குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் அடையாளம் காணப்பட்டு இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 28,29 ஆகிய தேதிகளில், குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6,500 பேரை கண்டறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சுமார் 450 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சந்தோலா ஏரி பகுதியில் அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளையும் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சந்தோலா ஏரிப் பகுதியில் இன்று (மே 20) நகராட்சி நிர்வாகம் ஒரு பெரிய இடிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. 2,500 க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை அடையாளம் காணப்பட்டு இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோத குடியேறிய வங்கதேச நாட்டினருக்குச் சொந்தமானவை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் பலத்த பாதுகாப்புடன் இடிக்கும் பணி நடந்து வருகிறது. குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்தை அகற்று பணி கடந்த ஒரு மாதமாக முழு வீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பெண் யூடியூபரின் ரகசிய டைரி மீட்பு!
-
தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது: ஆதவ் அர்ஜூனா
-
வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ: இ.பி.எஸ்., நையாண்டி
-
நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன
-
ரூ.25 ஆயிரம் லஞ்சம்: தபால் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
ஐ.பி., தலைவர் தபன் குமார் தேகா பதவி காலம் நீட்டிப்பு