இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, இதுவரை இரண்டு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்ஜினியரிங் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த 7ம் தேதி துவங்கியது. நேற்று மாலை, 6:00 மணி வரை, 1 லட்சத்து, 99,669 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 30,238 மாணவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி உள்ளனர்; 86,846 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றி உள்ளனர்.

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 'www.tneaonline.org' என்ற இணையதளத்தில், ஜூன், 6ம் தேதி வரை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், '1800 -425-0110' என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, 'tneacare@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement