ராணுவ வீரர்களை பாராட்டி நுாறடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் பேரணி

புதுச்சேரி: போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், நுாறு அடி நீளத்தில் தேசிய கொடியேந்தி மாணவர்கள் பேரணி சென்றனர்.
ஆபரேஷன் சிந்துாரில், ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி லாஸ்பேட்டை விமானம் நிலையம் அருகே நேற்று மாலை 5:00 மணியளவில் மாணவர்கள் பேரணி சென்றனர்.
இந்த பேரணியில், ஸ்கேட்டிங், என்.சி.சி., மாணவர்கள், தாகூர் கலைக் கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டர்.
பேரணியில், நுாறடி நீளம், 8 அடி அகலம் கொண்ட தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சாந்தி நகர் உள்ளிட்ட முக்கிய வழியாக, மீண்டும், விமான நிலையத்தில் பேரணி நிறைவுபெற்றது.
மேலும்
-
சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்
-
அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!
-
அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
-
குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!
-
இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்
-
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி