மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி : சென்னை, கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில், 2025-26ம் ஆண்டு தொழிற்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு என்ற 2 ஆண்டு பயிற்சியிலும், காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சி என்ற 1 ஆண்டு பயிற்சியிலும் சேரலாம்.
அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் காலணி உற்பத்தி தொழில்நுட்பம் என்ற 1 ஆண்டு பயிற்சியிலும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி என்ற 6 மாத பயிற்சியிலும் சேரலாம்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ என்ற ஒன்றரை ஆண்டுகால பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக விடுதி வசதி உண்டு. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 23ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!
-
இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்
-
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
-
அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு
-
162 கிலோ புகையிலை: தாய், மகன் கைது
-
பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ. மழை: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை மையம்!