குன்னுாரில் மாநில சாரணியர் பயிற்சி; கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வு

குன்னுார் : குன்னுாரில் நடந்து வரும் மாநில அளவிலான சாரணியர் பயிற்சி முகாமுக்கு வந்த, கல்வி அமைச்சர் மகேஷ் பயிற்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியில், மாநில அளவிலான சாரணியர் இயக்க பயிற்சி முகாம் கடந்த, 17ம் தேதி துவங்கியது. இந்த பயிற்சியில் சாரணியருக்கான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, கல்வி அமைச்சர் மகேஷ், முகாமிற்கு வருகை தந்து பார்வையிட்டார்.
பயிற்சியாளர்கள் மற்றும பயிற்சி சாரணியரிடம் கலந்துரையாடி, பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
மாநில சாரணிய ஆணையர் அலமேலு, மாநில சாரண பயிற்சி ஆணையர் தேன்மொழி, மாநில சாரணிய அமைப்பு ஆணையர் கோமதி ஆகியோர் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் குறித்து தெரிவித்தனர்.
முகாமில், மாநில பயிற்சியாளர்கள் ஷாலினி (தென்னக ரயில்வே), பிரமோதினி (தெலுங்கானா) ராமலதா (கர்நாடகா) ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், 80 சாரணிய ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 23ம் தேதி பயிற்சி நிறைவு பெறுகிறது.
மேலும்
-
சென்னை-பெங்களூரு சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்; 10 கி.மீ., காத்து கிடக்கும் வாகனங்கள்
-
அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!
-
அதிகாலை பயணத்தில் விபத்து; மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
-
குஜராத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2,500 வீடுகள் இடிப்பு!
-
இன்ஜி., படிப்புகளுக்கு 2 லட்சம் விண்ணப்பம்
-
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி