பகையை துாண்டி பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு!

இஸ்லாமாபாத்: ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பகையை துாண்டும் வகையில் பேசி, வன்மத்தை கொட்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு, அந்நாட்டு அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.
@1br
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். கடந்த ஏப்., 17ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் 'இரு நாடு கோட்பாடு' என மத அடிப்படையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சு தான் பஹல்காம் தாக்குதலுக்கு தூண்டுகோலாக அமைந்தது.
அவர் பேசுகையில், ''வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நாம் ஹிந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். நம் முன்னோரும் அதைத்தான் நினைத்தனர். நமது மதம் வேறு; நமது பழக்க வழக்கங்கள் வேறு. நமது மரபுகள் வேறு. நமது எண்ணங்கள் வேறு. லட்சியங்கள் வேறு. இருநாட்டு கோட்பாட்டின் அடித்தளம், அங்குதான் அமைக்கப்பட்டது.
நாம் ஒரு தேசம் அல்ல; இரண்டு நாடுகள். அதனால்தான், இந்த நாட்டை உருவாக்க நமது முன்னோர் இடைவிடாத போராட்டம் நடத்தினர். இந்த நாடு உருவாக நாங்கள் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தானின் கதையை அடுத்த தலைமுறைக்கு ஒவ்வொரு பெற்றோரும் சொல்ல வேண்டும்,'' என்றார்.
இதனைத் தொடர்ந்து காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. அங்கு சுற்றுலா பயணிகளை, அவர்களின் மதம் குறித்து கேட்டு பயங்கரவாதிகள் கொன்றனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி நுாற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றது.
இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக கூறி, அப்பாவி மக்கள் மற்றும் நமது ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பாகிஸ்தானின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய ராணுவம் தவிடுபொடியாக்கிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதும், அந்நாடு போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதனால் தனது இலக்கு நிறைவேறியதால், மனமிரங்கிய இந்தியா போரை நிறுத்தியது.
ஆனால்,' கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக' நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என பொய்யான தகவல்களை அந்நாட்டு மக்கள் மத்தியிலும், சர்வதேச ஊடகங்களிலும் பாகிஸ்தான் ராணுவம் பரப்பி வருகிறது. இந்திய விமானப்படை தளங்களை அழித்து விட்டோம் என்றும் அப்பட்டமாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் புளுகி வருகின்றனர்.
இதற்கு காரணமான, ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ' பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில், 'பீல்டு மார்ஷல்' என்ற பதவி உயர்ந்த பதவியாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முகமது அயூப் கானுக்கு இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்படி கிடைத்தது பதவி?
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிர், விதிமுறைகளின்படி இந்த பதவிக்கு தகுதியற்றவர். அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்து, அவர் தேர்தலில் போட்டியிடாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்த காரணத்தால், அவருக்கு ராணுவ தளபதி பதவியை தற்போதைய அரசு வழங்கியது. அதன்படி அவர், இம்ரான் கானை சிறையில் அடைத்து, அரசுக்கு பிரச்னை வராமல் காப்பாற்றினார். அப்படி தங்களை காப்பாற்றியவருக்கு, இப்போது பதவி உயர்வு வழங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.
வாசகர் கருத்து (8)
chanakyan - ,
20 மே,2025 - 21:55 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
20 மே,2025 - 21:42 Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
20 மே,2025 - 20:23 Report Abuse

0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20 மே,2025 - 19:45 Report Abuse

0
0
Ragupathi - Chennai,இந்தியா
20 மே,2025 - 21:27Report Abuse

0
0
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20 மே,2025 - 21:44Report Abuse

0
0
Chanakyan - ,
20 மே,2025 - 21:46Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
20 மே,2025 - 19:44 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement