கல்குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கரூர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் உள்ள தனியார் (மேகா புளூ மெட்டல் ) கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், 5 பேர் பலியாகி உள்ளனர். குவாரிகளில் எந்தவிதமான மண், கல் சரிவும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சுரங்க திட்டத்தில் பெஞ்ச் முறை யில், 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அக லம், 5 மீட்டர் உயரம் என அமைக்க வேண்டும். அவ்வாறு பெஞ்சு முறையில் செயல்படாமல் நெத்து குத்தாக, நேருக்கு நேராக கற்களை வெட்டி எடுத்த காரணத்தினால் தான், மல்லாக்கோட்டை கல்
குவாரியில் விபத்து நடந்துள்ளது.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு விதிப்படி ஈ.எஸ்.ஐ., பி.எப்., இன்சூரன்ஸ் போன்ற எதையும் அமல்படுத்தாததால் இழப்பீடு கிடைப்பதில்லை. தொடர்ந்து நடக்கும் விபத்துகளுக்கு காரணமான, சட்ட விரோதமாக செயல்படும் கல்
குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.