ரூ.9.35 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர் :சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 9 லட்சத்து, 35 ஆயிரத்து, 940 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.

கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி நடக்கிறது. இங்கு விளையும் நிலக்கடலை, நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடடத்தில் விற்பனை செய்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 404 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 63.60 ரூபாய், அதிகபட்சமாக, 71.40 ரூபாய், சராசரியாக, 70.40 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 13,648 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 9 லட்சத்து, 35 ஆயிரத்து, 940 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement