மஹா.,வில் புனரமைப்பு பணியில் சோகம்: 'ஸ்லாப்' விழுந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் பழைய கட்டடத்தின் 4வது மாடியில் நடந்த புனரைப்பு பணியின்போது 'ஸ்லாப்' விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் 'ஸ்ரீ சப்தஷிரிங்கி' என்ற பெயர் கொண்ட பழைய கட்டடத்தில் நான்காவது மாடியில் புனரைப்பு பணி நடந்து வந்தது. அப்போது, நான்காவது மாடியின் 'ஸ்லாப்' இடிந்து விழுந்தது. இதனால், மற்ற தளங்களிலும் இருந்த 'ஸ்லாப்'களும் கீழே விழுந்தன.

இதில் 11 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த கட்டடத்தில் 58 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டடம் பழையதாகிவிட்டதால், அதனை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மக்களை வேறு இடத்திற்கு மாற்றவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement