குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு 

சிதம்பரம் : சிதம்பரத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென, அனைத்து குடியிருப்போர் சங்கம் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் மல்லிகாவிடம், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:

சிதம்பரம் பஸ் ஸ்டாண்டு அருகே காந்தி சிலையை சுற்றி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்தி மின் விளக்குகள் அமைக்க வேண்டும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் வைப்பு தொகையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement