மீண்டும் சிக்கிய சிவபால் சிங் * ஊக்கமருந்து சோதனையில்...

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் இரண்டாவது முறையாக சிக்கிய சிவபால் சிங்கிற்கு 8 ஆண்டு தடை விதிக்கப்படலாம்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் சிவபால், 29. 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (86.23 மீ.,) வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) நீரஜ் சோப்ராவுடன் இணைந்து பங்கேற்றார்.
கடந்த 2021ல் இவரிடம், போட்டி இல்லாத நாளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவர, 2025, அக்டோபர் மாதம் வரை என 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்த விசாரணை முடிவில், 2023ல் சிவபால் தடை ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டது. இதனால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்ற இவர், தேசிய விளையாட்டில் (2023) தங்கம் வென்றார்.
2025 துவக்கத்தில், பாட்யாலாவில் பயிற்சியில் ஈடுபட்ட போது, சிவபாலிடம் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவர, தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இரண்டாவது முறையாக சிக்கியுள்ள நிலையில், இவரது செய்தது நிரூபிக்கப்பட்டால், 8 ஆண்டு தடையை சந்திக்க நேரிடும்.

Advertisement