சாரதா வித்யாலயா மாணவர்கள் கலக்கல்

திருப்பூர்; திருப்பூர் பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கடந்த 26 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துவருகிறது.
இப்பள்ளி மாணவர் கபிலன், 497 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கீர்த்தனா, 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; 490 மதிப்பெண் பெற்று அபிநவ்கார்த்திக் மூன்றாமிடம். இவர், அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்விலும் 21 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. மாணவி சுபஸ்ரீ, 594 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். இவர், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் 'சென்டம்' வாங்கியுள்ளார். மாணவி துரிகா, 591 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், கணிதம், வேதியியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். 590 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ள சுதர்சன், கணினி அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை, பள்ளி தலைவர் பழனிசாமி, முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் மகாலட்சுமி, தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி மற்றும் சிந்து சேவா சமிதி அறக்குழு உறுப்பினர்களில் துணை தலைவர் ஜெயபால், செயலாளர் ஜீவானந்தம், இணைச் செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் தர்மலிங்கம், உறுப்பினர் அனந்தநாராயணன் ஆகியோர் பாராட்டினர்.
பள்ளியில் தற்போது கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.