சுத்தம் செய்தபோது துப்பாக்கி 'டுமீல்'

கோவை; துப்பாக்கியை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக, வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் மணிகண்டன். இவரது பாதுகாப்பு அலுவலராக ஆயுதப்படையை சேர்ந்த பிரகாஷ் பணியமர்த்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், பாதுகாப்பு பணி முடிந்து வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் உள்ள ஒரு அறையில், பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக, துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தியதில், துப்பாக்கி வெடித்தது. இதில் வீட்டின் சுவரில் குண்டு பாய்ந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement