அமலாக்க துறை புகார் 'ஈஸ்மைட்ரிப்' நிஷாந்த் மறுப்பு

புதுடில்லி,:'மஹாதேவ் பெட்டிங் ஆப்' வழக்கில் 'ஈஸ்மைட்ரிப்'பின் தலைமை நிர்வாகியான நிஷாந்த் பிட்டியை, அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலியான 'மஹாதேவ்' பெட்டிங் ஆப் வாயிலாக நடந்த பண மோசடியில், ஈஸ்மைட்ரிப்பின் தலைமை நிர்வாகியான நிஷாந்த் பிட்டிக்கு தொடர்பு உள்ளதாக, அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இதையடுத்து, பிட்டி மீதான அமலாக்கத்துறை விசாரணை விரிவாக்கப்பட உள்ளது.

மேலும், கடந்த மாதம் பிட்டியின் வீட்டில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட 7 லட்சம் ரூபாய் பணம், குற்றத்தின் வாயிலாக கிடைத்த பணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நிஷாந்த் பிட்டி மறுத்துள்ளார்.

Advertisement