ம.பி., அமைச்சர் மீதான வழக்கை விசாரிக்கிறது சிறப்பு குழு

போபால் : பாகிஸ்தான் மீது நம் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் ஸோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு தொடர்ச்சியாக விளக்கம் அளித்தனர்.

பா.ஜ., ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் ஸோபியா குரேஷியை பற்றி அவதுாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டது.


இதன்படி, மூத்த போலீஸ் அதிகாரியான ஐ.ஜி., பிரமோத் வர்மா, டி.ஐ.ஜி., கல்யாண் சக்ரவர்த்தி, எஸ்.பி., வாஹினி சிங் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை மத்திய பிரதேச அரசு நேற்று அமைத்தது. இக்குழு விசாரணை நடத்தி, முதற்கட்ட அறிக்கையை வரும் 28ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது.

Advertisement