போரூர் சந்திப்பில் பொது கழிப்பறை

போரூர் :போரூர் சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ், 33 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது.
மவுன்ட் - பூந்தமல்லி சாலை - ஆற்காடு சாலை --- குன்றத்துார் சாலை ஆகியவை இணையும் பகுதியாக போரூர் சந்திப்பு உள்ளது.
இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க 2014ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.
போரூர் சந்திப்பில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இதனால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இச்சந்திப்பில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கு பேருந்துகள் உள்ளன. எனவே, மேம்பாலத்தின் கீழ் பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அங்கு வரும் பகுதி மக்கள் பயன்படுத்த போதிய கழிப்பறை வசதியில்லாம் இருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போரூர் மேம்பாலத்தின் கீழ் கழிப்பறை கட்ட மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.
தற்போது, நெடுஞ்சாலை துறை அனுமதியுடன், போரூர் மேம்பாலத்தின் கீழ், மதுரவாயல் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 33 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள், பெண்களுக்கு கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை