அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை

3


வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சக இந்திய பயணியால் கொல்லப்பட்டார்.


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷய் குப்தா தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்தார். இவர் டெக்சாஸில், ஓடும் பஸ்சில் சக இந்தியரான தீபக் கண்டேலால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட 30 வயதான அக்ஷய் குப்தா, 31 வயதான தீபக் கண்டேலால் தாக்கப்பட்ட போது பஸ்சில் அமர்ந்து இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையின் போது, தீபக் கண்டேலால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர், குப்தா தனது மாமாவைப் போலவே இருந்ததால் தான் இந்தச் செயலைச் செய்ததாக தெரிவித்தார்.



சுகாதார தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் துறையில் குப்தா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். இவரை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார். தனது நிறுவனத்தில் வளர்ச்சியை உருவாக்க, அமேசானின் வேலை வாய்ப்பை குப்தா நிராகரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement