ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

45

புதுடில்லி: ரூ.2,291 கோடி கல்வி நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக்கோரி, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.



மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.


கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement