குருகுலம் பள்ளி சாதனை

புதுச்சேரி : கோரிமேடு குருகுலம் மேல்நிலைப் பள்ளி 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி கலைச்செல்வி, மாணவர்கள் எழிலன், தர்ஷன் ஆகியோரும், பிளஸ் 2வில் மாணவர் விஷ்வந்த், மாணவி யுவஸ்ரீ, மாணவர் வசந்த ராஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் அருள்செல்வி ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பள்ளியின் துணை முதல்வர் சாந்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் கூறுகையில், 'இப்பள்ளியில் முன் மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பள்ளியில் முன் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட உபகரணங்களுடன் கற்பிக்கப்படுகிறது.
கட்டணத்துடன் புத்தகம் மற்றும் சீருடை இலவசமாக தரப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப பயிற்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும். பிளஸ் 2 தேர்வில் 2 மாணவர்கள் கணினி பயன்பாட்டில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
மேலும்
-
கோல்கட்டாவில் ட்ரோன் பறந்ததா போலீசார் விசாரணை
-
கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு: வெளியுறவு அமைச்சகம்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!