தென்பெண்ணையில் வெள்ளம் ஆபத்தை உணராத மக்கள்


போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று, 4,208 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட, 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றகரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை பொருட்
படுத்தாமல் போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவில் திருவிழாக்களில் பங்கேற்க காப்புகட்டும் பக்தர்கள் மற்றும் ஈமச்சடங்கு நடத்துவோர் என, 100க்கும் மேற்பட்டோர் ஆபத்தை உணராமல் ஆற்றில்
நீராடினர்.

Advertisement