கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று காலை, 4,208

வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிதொடர்ந்து 15 ஆண்டாக 100 சதம் தேர்ச்சிகிருஷ்ணகிரி, மே 21

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாணவி நிரஞ்சனா, 500க்கு, 477 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், கவியரசு, சஞ்சய் ஆகியோர், 468 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், சந்தியா, 461 மதிப்பெண் பெற்று. 3ம் இடமும் பெற்றுள்ளனர்


இதில், 2ம் இடம் பெற்ற கவியரசு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளி பெற்றோர் சங்க தலைவரும், காங்., கட்சி துணைத்தலைவருமான சேகர், பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர், சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி, சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும், பெற்றோர் சங்கத் தலைவர் சேகர், முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பள்ளி நிர்வாகிகளான மணி, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திம்மி உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement