செய்யூர் அரசு கல்லுாரியை தற்காலிகமாக ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடத்த முடிவு

செய்யூர்:செய்யூரில் புதிதாக துவங்கப்பட உள்ள அரசு மற்றும் கலைக்கல்லுாரிக்கு தனி கட்டடம் அமைக்கும் வரை, தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்லுாரியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
செய்யூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத் தொடரில்,'செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக்கல்லுாரிகள் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
செய்யூர் - போளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான, 7 ஏக்கர் இடத்தில், அரசு கலைக்கல்லுாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவ - மாணவியர் 'ஆன்லைன்' வாயிலாக அரசு கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
தற்போது, செய்யூர் அரசு மற்றும் கலைக் கல்லுாரிக்கு இந்த கல்வி ஆண்டிற்காக, ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தனி கட்டடம் அமைக்கும் வரை, இந்தாண்டு தற்காலிகமாக, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள, இரண்டு அடுக்குகளுடன் கூடிய எட்டு அறைகள் கொண்ட கட்டடத்தில் கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை