இடைக்கழிநாடு பகுதியில் மாம்பழ சீசன் துவக்கம்

செய்யூர்:இடைக்கழிநாடு பகுதியில், மாம்பழ சீசன் துவங்கி உள்ளது.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மா, பலா மற்றும் அது சார்ந்த தொழில்களில் பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைக்கழிநாடு சுற்றுவட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், மாமர தோப்புகள் உள்ளன.
இங்கு பங்கனபள்ளி, அல்போன்சா, செந்துாரா, நீலம், ருமானி மற்றும் ஒட்டு ரக மாங்காய் என, பல்வேறு விதமான மா வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இங்கு விளையும் மாம்பழங்கள் தோட்டங்களில் சில்லறையாகவும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு மொத்தமாக லாரிகள் வாயிலாகவும், ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது இப்பகுதியில் மாம்பழ சீசன் துவங்கி உள்ளது.
தோட்டங்களில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்பட்டு, சில்லறை வியாபாரத்தில் ஒரு கிலோ பங்கனபள்ளி 60-100 ரூபாய்கும், ஒரு கிலோ செந்துாரா 60-100, ஒரு கிலோ ஒட்டு ரக மாம்பழம் 50-80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரசாயனம் இல்லாமல், தோட்டத்தில் இருந்து நேரடியாக பழுத்த பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்வதால், இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்பவர்கள், சாலை ஓரத்தில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை