இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுாரில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வியாசேஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, பிரதான நீராதாரமாக விளங்குகிறது.
மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து, கிராமத்தின் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் எளிதாக செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முறையான பராமரிப்பு இல்லாததால், மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் சிதைந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன.
இதனால், குடிநீர் தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
கிராமத்தின் பிரதான நீராதாரமாக விளங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை