லாரி மீது டூவீலர் மோதல் பாதுகாப்பு படை வீரர் பலி

திருநெல்வேலி:பணகுடி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே டூவீலரில் சென்ற தொழிலக பாதுகாப்பு படையினர் டூவீலர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்னொருவர் காயமடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மதுரையை சேர்ந்த வெங்கடேன் 41, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கேம்ராஜ் 44, உடன் பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவில் இருவரும் சாப்பிடுவதற்காக டூவீலரில் ஓட்டலுக்கு சென்றனர். வெங்கடேசன் டூவீலரை ஓட்டினார். கேம்ராஜ் உடன் சென்றார். அப்போது முன்னால் சாலையோரம் நின்ற லாரி மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். தலைக்காயம் ஏற்பட்டு வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். கேம்ராஜ் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பணகுடி போலீசார் விசாரித்தனர்.

Advertisement