ராமேஸ்வரத்தில் சீனா இன்ஜின் பொருத்திய 4 படகுகள் பறிமுதல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தடை மீறி இருந்த அதிக குதிரை திறன் உள்ள சீனா இன்ஜின் பொருத்திய 4 விசைப்படகுகளை மீன் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் 700 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். ராமேஸ்வரம், இலங்கை இடையே குறுகிய நிலப்பரப்பு உள்ளத்தால், பாதுகாப்பு கருதி இங்குள்ள படகில் 240 குதிரை திறன் கொண்ட இன்ஜின் மட்டுமே பொருத்திட மீன்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ராமேஸ்வரத்தில் சில படகுகளில் 400 முதல் 450 வரை குதிரை திறன் கொண்ட சீனா இன்ஜின் பொருத்தி இருப்பதாக புகார் எழுந்தது.
இதனால் எளிதில் இலங்கை கடல் பகுதியில் ஊடுருவி மீன்பிடிப்பதால் மீன்வளம் அழிவதுடன், பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
நேற்று ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சரவணன், இந்திய கடற்படை அதிகாரி, மரைன் போலீசார் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி இருந்த படகுகளில் சோதனையிட்டனர்.
இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனை சேர்ந்த சந்தியா லியோன், காலீன்ஸ், அருள் ரிஷப், பிரபாகர் ஆகியோரது படகுகளில் சீனா இன்ஜின் பொருத்தி இருந்தது தெரிந்தது. இதனையடுத்து இஞ்சினில் சில பாகங்களை கழற்றி படகுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து படகு உரிமையாளர்கள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்தனர்.
மேலும்
-
குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி