மாரியம்மன் கோவில் தேர் 'ஷெட்' சீரமைக்கலாமே!

அவிநாசி ; கருவலுார் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் உள்ள சிறிய தேர் மூடி வைத்துள்ள தகர 'ஷெட்' பழுதடைந்த நிலையில், தேரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என பக்தர்கள் வேதனைப்பட்டனர்.
அவிநாசி அருகே கருவலுார் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இதில், ஆண்டுக்கு வருடந்தோறும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலில் பெரிய தேர் மற்றும் சிறிய தேர் ஆகியன உள்ளது. இதில், சிறிய தேரை சுற்றிலும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு தகர 'ஷெட்' பழுதடைந்து உடைந்துள்ளது. மேலும், தகர 'ஷெட்' பெயர்ந்து கழன்று விழுந்துள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் விரைந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement