சூர்யகுமார், நமன் தீர் அதிரடி... 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

மும்பை: டில்லி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆப்பிற்கு தகுதிபெற்று விட்ட நிலையில், மும்பை, டில்லி அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
வான்கடே மைதனாத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். பவர் பிளேவின் கடைசி ஓவரில் வில் ஜேக்ஸூம் (21), 7வது ஓவரில் ரிக்கெல்டனும் (25) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். திலக் வர்மா 27 ரன்களில் அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இறுதியில் சூர்யகுமார் யாதவும், நமன் தீரும் ஜோடி சேர்ந்து சிக்சர் மழை பொழிந்தனர். முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் 27 ரன்களும், சமீரா வீசிய 20வது ஓவரில் 21 ரன்களும் குவித்தனர். கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 48 ரன்கள் சேர்த்தது. 35 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், 73 ரன்களுடனும், நமன் தீர் 24 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
100 விக்கெட்
டில்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் ரிக்கில்டன் (21) விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். இதன்மூலம் பிரீமியர் லீக் தொடரில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும்
-
முதல்வரின் உறவினர் ஆகாஷ் தலைமறைவு; தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்
-
சிகிச்சை அளிக்காததே மூவர் உயிரிழப்புக்கு காரணம்; சீமான்
-
தள்ளாடும் 'இ - சேவை' மையங்கள்; 'சர்வர்' பிரச்னையால் தினமும் அவதி
-
காரியம் சாதிக்க தவழ்ந்து சென்றது யாரு?
-
மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர்?
-
தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது: சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி