சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து


சென்னை: சென்னையில் இருந்து டில்லி, கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


சென்னையில் இருந்து மாலை 5.30 மணிக்கு டில்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 8.35க்கு கொச்சிக்கும், இரவு 9.20 மணிக்கு புனே செல்லும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்தாகியுள்ளது. இதனால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


நிர்வாக காரணங்களுக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement