ஹவாலா' பணத்துக்கு கமிஷன் தருவதாக கட்டட தொழிலாளி கடத்தல்: 4 பேர் கைது
குமாரபாளையம்,
குமாரபாளையத்தில், 'ஹவாலா' பணத்துக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி கட்டட தொழிலாளி உள்பட இருவரை கடத்திய, ஆம்பூரை சேர்ந்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் சுருக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு, 45; கட்டட தொழிலாளி. இவர், கடந்த மார்ச், 24 காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தங்கராசு, மார்ச், 26 இரவு, 9:30 மணிக்கு தன் மகளின் மொபைல் போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, 'மார்ச், 24 மதியம், 12:30 மணிக்கு, அம்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார், 31, கோகுல், 30, அல்லிமுத்து, 35, நரசிம்மன், 36 ஆகிய நால்வரும், ஹவாலா பணம், 10,000 ரூபாய்க்கு, 30,000 ரூபாய் தருவதாக கூறி, குமாரபாளையம் தனியார் கல்லுாரி அருகே அழைத்துச்சென்றனர்.
பின், சொன்னபடி பணம் தராமல், 10,000 ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம் என, மிரட்டி தன்னையும், உடன் வந்த பெருமாள் என்பவரையும் ஓரிடத்தில் அடைத்து வைத்துள்ளனர்' என, கூறிவிட்டு போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து, தங்கராசு மனைவி பச்சியம்மாள், 35, அன்று இரவே, ஓமலுார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடம் குமாரபாளையம் என்பதால், அங்கு சென்று புகாரளிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். பின், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, அவர்கள் விசாரணை நடத்தி
வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குமாரபாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சந்தோஷ்குமார், கோகுல், அல்லிமுத்து, நரசிம்மன் ஆகிய, நான்கு பேரை கைது செய்த போலீசார், தங்கராசு, பெருமாள் ஆகிய இருவரையும் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு