2024ல் மட்டும் 18,200 ஹெக்டேர் காடுகள் அழிப்பு; அதிர்ச்சி தகவல்

3

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 18,200 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2023 உடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம் என தெரிய வந்துள்ளது.


உலகளவில் சுமார் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின் அடிப்படையில் காடுகளில் நிலை குறித்த தரவுகள் வெளியிடப்பட்டன. குளோபல் பாரஸ்ட் வாட்ச் மற்றும் மேலிலாண்ட் பல்கலை கொடுத்த தரவுகளின்படி, 2001ம் ஆண்டு முதல் நாட்டில் 23.1 லட்சம் ஹெக்டேர் மரங்களை அழிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 7.1 சதவீதம் மரவளம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.29 ஜிகாடன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகள் ஏற்பட்டுள்ளதையும் ஆய்வு முடிவுகள் காண்பிக்கிறது.


இந்தியாவில் 2002ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 3,48,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மை காடுகளை (5.4%) இழந்துள்ளது. அதே காலகட்டத்தில் மொத்த மரவள இழப்பு 15 சதவீதமாக உள்ளது.


2022ல் 16,900 ஹெக்டேரும், 2021ல் 18,300 ஹெக்டேரும், 2020ல் 17,000 ஹெக்டேரும் மற்றும் 2019ல் 14,500 ஹெக்டேரும் ஈரப்பதமான முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

Advertisement