காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

கோவை: கோவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு டேம் இடது கரை. தமிழக -கேரள எல்லையில் உள்ள இந்தப்பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணிக்கு வந்த ஒற்றை யானை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மேரி,77, என்ற மூதாட்டியை மிதித்து கொன்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருடன் வீட்டில் தங்கியிருந்த தெய்வானை 75 என்பவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement