பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது
வியாசர்பாடி, வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயது பெண், தன் 4 வயது மகளுடன் தனியாக வசித்து, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்.
கடந்த 14ம் தேதி, வீட்டருகே குடிநீர் பிடிக்க அப்பெண் சென்ற நிலையில், இவரது வீட்டில் புகுந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், அப்பெண்ணின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
தண்ணீர் பிடிக்க சென்ற அப்பெண் திரும்பி வந்த நிலையில், அந்த இளைஞர் தப்பியோடினார். இதையடுத்து, சிறுமிக்கு இரண்டு நாட்களாக கடும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலீசில் புகார் அளிக்க சிறுமியின் தாய் பயந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் 'குழந்தைகள் உதவி எண்' 1098க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சமூக அலுவலர் மலர்விழி, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த சக்திவேல், 18, என்பரை, நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
இன்றைய மின்தடை
-
தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
-
கால்வாய் கரையில் கனரக வாகனங்கள்: விவசாயிகள் அதிருப்தி