ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலையில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது.
இதை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை டிரம்ப் நிறுத்தினார். இது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சலுகையை ரத்து செய்தார்.
தற்போது, வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி கூறியதாவது: வன்முறை, யூத எதிர்ப்பு ஆகியவற்றை வளர்க்க துணை போவதால் ஹார்வர்டு பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, அவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சலுகை, உரிமை அல்ல. சரியானதைச் செய்ய ஹார்வர்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.













மேலும்
-
உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
-
நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று
-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை
-
கோவை, நீலகிரிக்கு 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்தது சென்னை வானிலை மையம்!
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு