விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்


நாமக்கல் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கக்கோரி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன், தமிழ்நாடு டிஜிட்டல் பிரின்டிங் சங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நரேஷ் ராஜசேகர் தலைமை வகித்து பேசியதாவது: பிளக்ஸ் பேனர் தயார் செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறை

முகமாகவும், 5,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பிளக்ஸ் பேனர்கள், குறிப்பிட்ட இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.

ஆனால், நாமக்கல் மாநகராட்சி பணியாளர்கள், மூன்று நாட்களுக்கு முன்பாகவே அவற்றை அகற்றி விடுகின்றனர். இதனால் எங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டோர், பிளக்ஸ் பேனர் தயார் செய்ததற்கு பணம் வழங்காமல் தாமதிக்கின்றனர். மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, பிளக்ஸ் பேனர்களை அகற்றுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர பேனர்களை அரசு விதிப்படி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன் கோஷம் எழுப்பினர். பின், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement