பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி மும்முரம்


அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட, பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கரூர் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட தாடிக்கொம்பு முதல் பள்ளப்பட்டி வழியாக, அரவக்குறிச்சி வரை உள்ள சாலை மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி அருகே உள்ள சௌந்தராபுரம் சாலையில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், முடிவு பெற்றதை தொடர்ந்து, சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், சாலையின் அகலம் மற்றும் ஜல்லிக்கற்கள் அடங்கிய கலவையின் தரத்தினை நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி மற்றும் உதவி பொறியாளர் வினோத்குமார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Advertisement