சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி:தமிழக - ஆந்திர மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா காளிக்கோவிலில், வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது.

இங்கு பணியாற்றும் அலுவலர்கள் டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தற்காலிக அனுமதி சீட்டு வழங்குவது, கணக்கில் வராத பணத்தை வாகனங்களில் கடத்த அனுமதிப்பது, விதிமீறல்கள் இருந்தாலும் நடைசீட்டுகளில் அபராதம் விதிக்காமல் அனுப்பி விடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் போலீசார் சோதனைச்சாவடியில் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத, 1.43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைச்சாவடியில், பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சையத் ஜவ்வாது அஹமத்துவிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement