பொது சுகாதாரத்துறை திட்ட செயல்பாடு ஜூனில் ஆய்வு துவக்கம்

விருதுநகர்:பொது சுகாதாரத்துறையில் திட்டங்களின் செயல்பாடு குறித்து மாவட்டங்கள் தோறும் ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் தனிக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஜூன் முதல் இப்பணி துவங்குகிறது.

பொது சுகாதாரத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம், வருமுன் காப்போம், பாதம் பாதுகாப்போம் உட்பட பல திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் பயன் அடைந்தவர்கள் விபரம், மருந்து, மாத்திரைகள் அனைத்து பகுதியின் பயனாளிகளுக்கும் சென்றடைந்த விபரம் என அனைத்தையும் திரட்டி ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் தனிக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இக்குழுவினர் நான்கு மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஆய்வுகளை மேற்கொண்டு மாவட்டங்கள் வாரியாக அறிக்கையை தயார் செய்து மொத்த பட்டியலாக தொகுத்து தமிழக அரசிடம் சமர்பிப்பர்.

இதன் அடிப்படையில் மாநில அரசின் திட்டங்களை சிறப்பாக செய்த மாவட்டங்கள், பின்தங்கியுள்ள மாவட்டங்கள் விபரம், தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் ஜூன் முதல் ஆய்வு துவங்குகின்றனர்.

Advertisement