மாநில சைக்கிள் போட்டிக்கு இலவச பயிற்சி முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில் கோடைகால இலவச சைக்கிள் பயிற்சி முகாம் லாஸ்பேட்டையில் நடைபெற்று வருகிறது.
சைக்கிள் ஓட்டுவதால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்பதை புதுச்சேரி சைக்கிளிங் அசோசியேஷன் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரும் ஜூன் மாதம் புதுச்சேரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.
இப்போட்டிக்கு புதுச்சேரி மாணவர்களை தயார் படுத்தும் நோக்கில் 'கோ சைக்கிளிங், கோ ஒலிம்பிக்' என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 12ம் தேதி முதல் இலவச சைக்கிளிங் பயிற்சி முகாம் நடத்தி வருகிறது.
வரும் 30ம் தேதி வரை தினசரி காலை 6:00 மணி முதல் 7:30 மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரையில் பயிற்சியாளர் நாகராஜன் பயிற்சி அளித்து வருகிறார்.
தற்போது, 15 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், 99441 29466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!