சைக்கிள் மீது பைக் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

பாகூர்: சோரியாங்குப்பத்தில் சைக்கிள் மீது பைக் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் நாமதேவன் 54; கூலித் தொழிலாளி. இவர், நேற்று இரவு பாகூர் அருகே சோரியாங்குப்பத்திற்கு சைக்கிளில் சென்றுவிட்டு, விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக திரும்பினார்.

சோரியாங்குப்பம் புதிய மேம்பாலம் வழியாக வந்தபோது, எதிரே வந்த பல்சர் பைக், சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நாமதேவன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பைக்கில் இருந்து விழுந்த திருவந்திபுரம், புதுநகர் ஆகாஷ் 21; அஜி 20; இருவரும் காயமடைந்தனர். அவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement