உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!

2


புதுடில்லி: ''உலகில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்'' என பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: அதிகமான தொழிலதிபர்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது உங்களது வட கிழக்கு மாநிலங்கள் மீதான அக்கறையை எடுத்துரைக்கிறது. வட கிழக்கு மாநிலங்கள் எழுச்சி பெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் வளர்ச்சியை உருவாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பன்முகத்தன்மை



வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய, வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை கொண்டு வருவது முக்கியம். எங்களுக்கு, கிழக்கு என்பது ஒரு திசை மட்டுமல்ல. எங்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளது. இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி மற்றும் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும்.

வளர்ச்சி அதிகம்



அமைச்சர்கள் 700 க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்து ஆய்வு செய்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அதிகம். வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement