அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!

3


போர்ட் பிளேர்: அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


அந்தமானில் இந்தியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.


தற்போது, முப்படைகளின் உத்தரவின் பேரில், அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து மே 16ம் தேதி விமானப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் (மே 23) , நாளையும் (மே 24) அந்தமானில் எந்த சிவிலியன் விமானமும் பறக்க அனுமதிக்கப்படாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement