பெங்களூரு விமான நிலையம் ஆந்திர முதல்வர் பாராட்டு

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது முகநுாலில் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

அரசு முறை பயணமாக, பெங்களூரு வருகை தந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயடு, தனது முகநுாலில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு, விமான நிலைய முதன்மை செயல் அதிகாரி ஹரியுடன் சென்றேன்.

அங்குள்ள அதிகாரிகள், பயணியருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர், சர்வதேச விமானங்களுக்கான வசதிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன்.

இயற்கை சூழலில் அதிநவீன வசதியுடன், இரண்டாவது முனையம் உருவாக்கப்பட்டு உள்ளது, உண்மையிலேயே ஈர்க்கக் கூடியது. விமான நிலையத்துக்குள் ஒரு இயற்கை தோட்டத்தை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு வசதிகள், சுற்றுச்சூழல், பலதரப்பட்ட போக்குவரத்து மையமாக, விமான நிலையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஆந்திராவிலும் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement